2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'காதில் அடையாளமிடப்பட்ட மாடுகளை மட்டும் இறைச்சியாக்கலாம்'

Thipaan   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 06:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

தென்மராட்சி பகுதிகளிலுள்ள மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் போது, காதில் அடையாளமிட்ட மாடுகளை மாத்திரம் வெட்டவேண்டுமென, தென்மராட்சி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி ஜி. இரகுநாதன், செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.

அடையாளமிடப்பட்ட மாடுகள் தவிர்ந்த ஏனைய மாடுகளை வெட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தென்மராட்சி மிருசுவில் வடக்குப் பகுதியில், பட்டிகளிலுள்ள மாடுகளுக்கு கால்வாய் நோய் தாக்கம் ஏற்பட்டமை கடந்த ஜூன் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, தென்மராட்சி பிரதேச கால்நடை வைத்தியதிகாரி பிரிவிலிருந்து கால்நடைகளை வெளியில் கொண்டு செல்வதற்கும் வெளியிடங்களிலிருந்து கால்நடைகளை தென்மராட்சி பிரதேசங்களுக்கு கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கால்நடை வைத்தியதிகாரி பணிமனையால் கால்வாய் நோய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு, கால்வாய் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது, கரவெட்டி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளிலும் கால்வாய் நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் மேற்கொண்டு வருகின்றன. 

அத்துடன், கால்வாய் நோய் தாக்கம் இல்லையென உறுதி செய்யப்பட்ட, அதாவது காதில் அடையாளம் இடப்பட்ட மாடுகள் மாத்திரம் இறைச்சிக்காக வெட்டப்படவேண்டும் என தென்மராட்சி பிரதேச மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களுக்கு கண்டிப்பான அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தென்மராட்சி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி  தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் தென்மராட்சி பிரதேசத்தில் கால்வாய் நோய் தாக்கம் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 1

  • R. Ariyasamy Wednesday, 03 April 2019 08:43 AM

    Love

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .