2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மக்கள் நிம்மதியாக இல்லை: சி.வி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா

எமது நாட்டில் 30 வருட காலமாக மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இன்றும் அவர்கள் நிம்மதியாக இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.

உலக உளநல நாளையொட்டி வடக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் 'சித்தம் அழகியார்' என்னும் சிறப்பு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைக்கைதிகள் சிறையில் பல வருடகாலம் இருக்கின்றதால் அவர்களது மனநிலை பாதிப்படைந்துள்ளது. யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புக்களை கண்டு அவர்கள் இன்றுவரை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள். அவர்களை மீட்டெடுக்க நாம் பொறுப்புடன் செயற்படவேண்டும். அந்த வடுக்களை உணர்ந்து நாம் செயற்படவேண்டும்.

உளநல பாதுகாப்பு என்று கூறும் போது நாம் மற்றவர்களின் மனதில் ஏற்படுத்தும் வடுக்களை நாம் உணர வேண்டும். பல நடவடிக்கைகள் ஒருவகை உடல் ஊறினை ஏற்படுத்தினாலும் உடல் ஊனத்தை ஏற்பட வைத்தாலும், உடற் பாதிப்புடன், சூழற் பாதிப்பையும் இவை ஏற்படுத்துவதால் மக்கள் மனநலம் குன்றி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் அமுக்கப்படுகின்றார்கள்.

பல சிறைச்சாலைகளில் வாடி வதங்கி வாழும் எமது சகோதர சகோதரிகள் இப்பேர்ப்பட்ட ஒரு பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். ஆனால் சில சமயங்களில் அந்தப் பாதிப்புக்களையே ஒரு கவச ஆயுதமாக்கி மனப்பாதிப்பை வெளியே நிறுத்தக்கூடியவர்களும் உள்ளார்கள்.

யுத்த காலத்தின் போது சுனாமி எம் பிரதேசத்தை பாதித்தது. அப்போது சுனாமியின் பின்னரான சில காலத்திற்கு போரில் உக்கிரமாக போரிட்ட இரு தரப்பாரும் மனித அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாய் ஒழுகி பாதிக்கப்பட்ட பலபேருக்கு அன்பையும் அனுசரணையையும் வழங்கினார்கள்.

ஓரிரு வாரங்களின் பின்னர் வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிட்டது. ஒருவரையொருவர் கொல்ல எத்தணித்தார்கள். எதிரெதிராக நின்றிருந்தோர்.

ஆனால், இன்று நாம் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டுள்ளோம். எம்மக்களின் நலம் காணவேண்டிய ஒரு கடப்பாடு எம் எல்லோரையும் பீடித்துள்ளது. மனதில் மாண்புடைய மனிதநேயம் மலர வேண்டிய ஒரு மாபெரும் கடப்பாடு எம்மக்களை சார்ந்துள்ளது என அவர் மேலும் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .