2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடக்கில் மலர் கண்காட்சி

George   / 2014 நவம்பர் 03 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் மலர் கண்காட்சி எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.
 
5ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த மலர் கண்காட்சி தொடர்ந்து எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
 
இக்கண்காட்சியில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் அலங்கார தாவரங்களையும், பயன்தரு மரங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பண்ணையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளதுடன் விற்பனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர்.
 
மேலும், இந்த கண்காட்சியில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தினமும் இலவசமாக பயன்தரு மரக்கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் கூறினார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .