2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'படித்த நோயாளிகளை பாடசாலைகள் உருவாக்குகின்றன'

Menaka Mookandi   / 2014 நவம்பர் 07 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

பாடசாலைகள், படித்த நோயாளிகளை உருவாக்குகின்ற என்ற கருத்து சமூகத்தில் இன்று காணப்படுகின்றது என வடமாகாண கல்வி பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் வியாழக்கிழமை (06) தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற மாவட்ட மட்ட கால்பந்தாட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கான கேடயங்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இதற்கு காரணம்,  மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவதுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடாமை ஆகும். இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் தேர்ச்சி பெறவேண்டும். எமது கல்வி முறைமையில் கற்கும் பாடத்திட்டத்திற்கு மேலதிகமாக 7 விதமான தேர்ச்சிகளை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்த 7 விடயங்களில் பொழுதுபோக்கு அம்சம் என்னும் விடயமும் காணப்படுகின்றது. மேலும், இலக்கியம், நாடகம், கவிதை மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடலும் அடங்குகின்றன.

விளையாட்டு துறையில் ஒவ்வொரு மாணவர்களும் அக்கறை காட்டவேண்டும். ஒரு வீதமான மாணவர்களே கல்வியுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியபபட்டுள்ளது.

மாணவர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இது மாணவர்களிற்கு தேக பயிற்ச்சியாகவும் அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .