2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விதை வெங்காயம் விநியோகம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 07 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.மாவட்ட வெங்காய செய்கையாளர்களுக்கு 'திருநெல்வேலி ரெட்' சின்ன வெங்காய விதைகள் வெள்ளிக்கிழமை (07) முதல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி  எஸ்.கருணைநாதன் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார்.

திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தால், சூழலுக்கு பொருத்தமானது என ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட சின்ன வெங்காய விதைகளே இவ்வாறு விநியோகிக்கப்படுகின்றது.

பொதுவாக சின்ன வெங்காயம் 90 நாட்கள் கால அறுவடையை கொண்டமைந்ததாக காணப்படும். ஆனால் இவ்வகை வெங்காயத்தை 55 நாட்களில் அறுவடை செய்ய முடியும்.

இந்த வெங்காய விதைகள் ஒரு அந்தர் (அண்ணளவாக 50 கிலோ) 2,750 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .