2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் அழுகிய சடலம் கண்டுபிடிப்பு

Kanagaraj   / 2014 நவம்பர் 09 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் பொன்னாலை சந்திக்கு அண்மித்த கடற்கரையை அண்டிய காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருக்கின்றமை சனிக்கிழமை (08) மாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்.

மேற்படி சடலத்தை கண்ணுற்ற பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தந்தமைக்கமைய சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் கூறினர்.

சடலம் அவ்விடத்திலேயே இருப்பதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மல்லாகம் மாவட்ட நீதவானுடன் சென்று சடலத்தை மீட்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சில வாரங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .