2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காணியுடன் சேர்த்து காசோலைகளும் கையளிப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 24 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வளலாய் பகுதியில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற காணிகளை மீளக் கையளிக்கும் நிகழ்வில் காணி உரிமையாளர்கள் 392பேருக்கு தலா 13,000 ரூபாய் பெறுமதியான காசோலைகளும் கையளிக்கப்பட்டதாக யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.மோகனேஸ்வரன் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து விளக்கமளித்த அவர், 'வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளில் விடுவிக்கப்பட்ட 430.6 ஏக்கர் காணிகள், திங்கட்கிழமை (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டது' என்றார்.

'இதன்போது வழங்கப்பட்ட காணி பத்திரங்களுடன் காசோலையும் சேர்த்து வழங்கப்பட்டது. மீளக்குடியேறும் மக்கள் தங்கள் காணிகளை துப்பரவு செய்துகொள்ளும் நோக்கில் இந்த காசோலை வழங்கப்பட்டது.

காணி துப்பரவு செய்வதற்கு 5,000 ரூபாயும், அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு 3,000 ரூபாயும், உணவுத் தேவைக்காக 5,000 ரூபாயும் என இந்த காசோலை வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X