2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 191பேருக்கு காணி உறுதிகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 24 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 191 பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு, யாழ் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 50 பேருக்கும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 91 பேருக்கும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 40 பேருக்கும் ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவில் 10 பேருக்கும் இந்த காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

விவசாயம் செய்பவருக்கு ஒரு ஏக்கரும் குடியிருப்பாளர்களுக்கு 2 பரப்பு காணிக்குமான உறுதிகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்டச் செயலாளர், '100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதுவரை காலமும் உறுதிகள் இல்லாததால் வீட்டுத்திட்டம் முதலான பல உதவிகளை இந்த மக்களால் பெறமுடியாது இருந்தது. இனி அவ்வாறான பிரச்சினைகள் இவர்களுக்கு ஏற்படாது' என்றார்.

இதேவேளை, 'காணி உறுதிப்பத்திரம் இல்லாத அனைவருக்கும் அவற்றைப்  பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X