2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவின் கையெழுத்துடன் காணி உறுதிகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 24 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

முன்னாள் ஜனாதிபதியின் கையெழுத்து மற்றும் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட காணி உறுதிகளே, யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 190 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில்   செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன.

அந்த காணி உறுதிப்பத்திரங்களில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு ஜனாதிபதி என்பதன் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்து இட்டுள்ளார். கையெழுத்திட்ட திகதி 2015 ஜனவரி 6ஆம் திகதி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், காணி பதிவாளரின் கையெழுத்தில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இடப்பட்டுள்ளது. காணி உறுதியின் பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் போது, அவை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X