2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஒஸ்மானியக் கல்லூரி கட்டட திறப்பு விழா

Gavitha   / 2015 மார்ச் 24 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், எம்.எல்.லாபீர்


யாழ். ஒஸ்மானியக் கல்லூரியில் வடமாகாண சபையின் 11.2 மில்லியன் ரூபாய் நிதி செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் வியாழக்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா

ஆகியோர் இணைந்து இந்த கட்டடத்தை திறந்து வைத்தனர்.

இதன்போது, 'கிரா' நிதியத்தின் அனுசரணையில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

'யாழ்.மாவட்டத்தில் சிறுதொகையாகவுள்ள முஸ்லீம்களுக்கு என்னால் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள், உறுப்பினர்கள் தான் முஸ்லீம்களின் நலனை உறுதிசெய்யவேண்டும்' என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X