2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வாகனத்தில் சென்று கொள்ளையடித்த கும்பலுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 மார்ச் 24 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வாகனங்களில் குழுவாகச் சென்று கொள்ளையடித்து வந்த கும்பலைச் சேர்ந்த 4 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் செவ்வாய்க்கிழமை (24) உத்தரவிட்டார்.

வரணிப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் திருட்டுச் சம்பவத்தை அடுத்து, கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஷிந்தக என்.பண்டாரவின் ஆலோசனையின் அடிப்படையில் விழிப்புக் குழுவொன்று செயற்படுத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை 2 மணியளவில், வானில் வந்த 8பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்று, வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முற்பட்டவேளை, அவர்களில் நால்வரை மடக்கிப்பிடித்த விழிப்புக்குழுவினர் நையப்புடைத்து அவர்களின் வாகனத்தையும் அடித்து உடைத்தனர்.

தொடர்ந்து கொடிகாமம் பொலிஸாரிடம் கொள்ளையர்கள் ஒப்படைக்கப்பட்டனர். பொதுமக்களின் தாக்குதலில் படுகாயமடைந்த கொள்ளைக்கார கும்பலைச் சேர்ந்த நால்வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலைக்கு சென்ற நீதவான், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனம் இலக்கத்தகடற்ற வாகனம் என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X