2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலப்பு: பிரதான சந்தேகநபர் கைது

Kanagaraj   / 2015 மார்ச் 25 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    செல்வநாயகம் கபிலன்

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (24) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட பாடசாலை காவலாளிகள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையேற்படின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் கடந்த 18 ஆம் திகதி இரவு நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டது. மறுநாள் அந்நீரைப் பருகிய 26 மாணவர்கள் மயங்கி வீழ்ந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நீர்த்தாங்கியினுள் இருந்து நஞ்சு போத்தல் ஒன்றை மீட்டனர். இதனையடுத்தே, நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தெரியவந்தது. 

இதனையடுத்து பாடசாலை காவலாளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மயிலங்காடு பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X