2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நேர்மையே சேவைக்கு உரித்தானது: யாழ். மாவட்டச் செயலாளர்

Menaka Mookandi   / 2015 மார்ச் 25 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மக்களுக்கான சேவையை நேர்மையான வழியில் செய்வதே சிறந்தது என யாழ்.மாவட்டச் செயலராக இன்று புதன்கிழமை (25) கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாற்றலாகி செல்வதையடுத்த, இதுவரை காலமும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகராக கடமையாற்றிய நாகலிங்கம் வேதநாயகன் யாழ். மாவட்டச் செயலாளராக கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய மாவட்டச் செயலாளரை வரவேற்கும் நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (25) நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே மாவட்டச் செயலாளர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'மக்களுக்கான சேவையை நேர்மையாகச் செய்யவேண்டும்.

உத்தியோகத்தர்கள் அனைவரும் குழுவாக ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே அனைத்து விடயங்களையும் சிறப்பாகச் செய்ய முடியும். முன்னைய மாவட்டச் செயலாளருக்கு வழங்கிய ஒத்துழைப்பை எனக்கும் வழங்குவீர்கள் என நான் நம்புகின்றேன்.

நேர்மையான வழியில் விரைவான சேவைகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைத்து தூரநோக்குடன் செயற்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் நான் முன்னர் கடமையாற்றியதால் எனக்கு பரீட்சயமான மாவட்டமாக இது உள்ளது. இங்கு என்னால் அனைத்தையும் சிறப்பாகச் செய்ய முடியும் என நம்புகின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X