2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்தவருக்கு சமுதாய சீர்திருத்தப்பணி

George   / 2015 மார்ச் 25 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

பொது இடத்தில் மதுபானம் அருந்தி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த நபரை 200 மணித்தியாலங்கள் சமூக வேலையுடன் கூடிய சமுதாய சீர்திருத்த பணிக்கு உட்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, புதன்கிழமை(25) உத்தரவிட்டார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை(24) கைது செய்யப்பட்ட நபரை, பொலிஸார் நீதிமன்றத்தில்; ஆஜர்ப்படுத்தியபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X