2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு விவசாய அமைச்சில் 61 பேருக்கு நிரந்தர நியமனம்

Princiya Dixci   / 2015 மார்ச் 25 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விவசாய அமைச்சுக்குட்பட்ட திணைக்களங்களில் அமைய அடிப்படையில் பணியாற்றிய 61 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (25) வழங்கப்பட்டது. 
 
வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றில் அமைய அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இந்த நிரந்தர நியமனத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வழங்கினார்.
 
இதன்போது உரையாற்றிய விவசாய அமைச்சர்,
 
வடமாகாண விவசாய அமைச்சுக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. வடமாகாண விவசாயத் திணைக்களத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணியின் எண்ணிக்கை 510. ஆனால், 361 பேரே தற்போது சேவையில் உள்ளனர். இன்னும் 149 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கென அங்கிகரிக்கப்பட்ட ஆளணியின் எண்ணிக்கை 571. ஆனால், 315 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 256 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
 
இதேபோன்று, நீர்ப்பாசனத் திணைக்களத்தில் 124 வெற்றிடங்களும், கூட்டுறவு திணைக்களத்தில் 40 வெற்றிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. ஆளணிப்பற்றாக்குறைவு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பாரிய தடையாக இருப்பதாகவும் இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை திணைக்களத் தலைவர்களும் அமைச்சின் செயலாளரும் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X