2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மீனவரின் படகு எரிப்பு: இருவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 மார்ச் 25 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை சம்பாட்டி கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்ட மீனவரின் படகை எரித்த குற்றச்சாட்டில் கைதான இருவரையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் புதன்கிழமை (25) உத்தரவிட்டார்.

நாரந்தனையை சேர்ந்த ஏ.அசோகன் என்பவருக்கு சொந்தமான 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான படகு திங்கட்கிழமை (23) இரவு இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்டது. படகு எரிக்கப்பட்டமை தொடர்பில் படகு உரிமையாளர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அதேயிடத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (24) மாலையில் கைதுசெய்தனர்.

இவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X