2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

குடிநீர் விநியோகம் தொடரும்

George   / 2015 மார்ச் 25 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று வடமாகாண சபையின் நிபுணர் குழுவால் கூறப்பட்டாலும் தொடர்ந்தும் அப்பகுதிக்கான குடிநீர் விநியோகத்தை தொடர்ந்தும் வழங்கப்போவதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி, புதன்கிழமை(25) தெரிவித்தார். 

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பின் பின்னர்;, அப்பகுதிக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதா என அவரிடம் கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், இன்னும் 3 மாதங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய வசதிகள் தற்போது எங்களிடம் இருக்கின்றன. மேலும் வசதிகள் கிடைக்கப்பெறும். தொடர்ந்தும் எங்களால் குடிநீர் விநியோகம் செய்யப்படும். தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை, நல்லூர் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகித்துவருகிறோம்.  

அடுத்து வரும் மாதங்கள் வரட்சியானவை என்பதால், வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களுக்கும் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X