2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவி புரியுமாறு கோரிக்கை

George   / 2015 மார்ச் 31 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதார நிலையை கருத்திற்கொண்டு அந்தக் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரிடம் மாவட்ட பெண்கள் அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் 5,646 விதவைகளும், 1,888 கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் உள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தலைமை தாங்கி வழிநடத்தி வாழ்வாதார செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றனர். 

இவ்வாறான குடும்பங்களில் 80 வீதத்துக்கும் அதிகமான குடும்பங்கள், தமக்கான குடும்ப வருமானமின்றி அன்றாட வாழ்வாதாரத்துக்கு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. சிறார்கள் கல்வி வசதி ஏனைய அடிப்படை வசதிகளையும் இவர்களால் பூர்த்தி செய்ய இயலாமல் இருக்கின்றது.  

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலையை கருத்திற்கொண்டு விசேட உலருணவு நிவாரணத்தை குறிப்பிட்ட காலத்துக்கு வழங்க வேண்டும் என மாவட்ட பெண்கள் அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .