2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் கைதானவருக்குப் பிணை

George   / 2015 மார்ச் 31 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, 60 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதவான் சி.சதீஸ்தரன், திங்கட்கிழமை (30) அனுமதியளித்ததாக சுன்னாகம் பொலிஸார், செவ்வாய்க்கிழமை(31) தெரிவித்தனர். 

அத்துடன், இது தொடர்பான வழக்கை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியை சேர்ந்த சந்தேகநபர், ஒரே தாளில் 1 மில்லியன் அமெரிக்க டொலரை வைத்திருந்த குற்றத்துக்காக சுன்னாகம் பொலிஸாரால் கடந்த 16 அம் திகதி கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தால் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .