2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஐரோப்பிய நாடுகளுக்கான பழ ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 மார்ச் 31 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

ஈ தொற்று அற்ற தரமுமான பழங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசாங்கத்தால் மாவட்ட விவசாய திணைக்களங்களூடாக புதிய திட்டமொன்று  நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக வடமாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் கி.ஸ்ரீ பாலசுந்தரம் செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

பழங்களில் ஈக்களின் தாக்கங்கள் இருப்பதால், இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான பழ ஏற்றுமதியானது. வீழ்ச்சியடைந்துள்ளது. ஈ தொற்றுள்ள பழங்களை ஐரோப்பிய நாடுகள் நிராகரிக்கின்றன. இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தி தரமுள்ள ஈ தொற்று அற்ற பழங்களை ஏற்றுமதி செய்யவேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது.

இதற்கான கால அவகாசத்தை ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு வழங்கியுள்ளன. அந்த கால அவகாசத்தில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய திணைக்களத்தால் பழங்களின் ஈ முகாமைத்துவம் செய்யப்படுகின்றது.

இலங்கையிலிருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவது மாம்பழம் ஆகும். மாமரம் பூத்து ஒரு மாதத்தில் லக்ரோபைற் எனும் புரத இரையை, மாமரங்களில் தெளிக்க வேண்டும். தொடர்ந்து கிழமைக்கு ஒரு தடவைகள் என்ற ரீதியில் இரண்டு மாதங்களுக்கு தெளிக்க வேண்டும்.

இந்த புரத இரையானது இளம் பருவத்தில் இருக்கும் பழ ஈக்களை கவர்ந்து அழிக்கக்கூடியது. இதன்மூலம் பழ ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இது ஒரு ஆரம்பகட்ட முகாமைத்துவ செயற்பாடு ஆகும்.

இதனை ஒவ்வொரு விவசாயிகளும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பழ ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி தரமுள்ள பழங்களை ஏற்றுமதி செய்து நல்ல சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி, நல்லூர் ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்த முகாமைத்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்து விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .