2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை கிணற்றுக்குள் வாளை போட்டவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 மார்ச் 31 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கிணற்றுக்குள் வாளொன்றைப் போட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்கரன் செவ்வாய்க்கிழமை (31) உத்தரவிட்டார்.

மேற்படி பாடசாலை கிணற்றிலிருந்து 4 ½ அடி நீளமான வாள் ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. வாள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குழு மோதலில் ஈடுபடும் சந்கேதநபர் ஒருவரை கைது செய்தனர்.

மோதல் ஒன்றில் ஈடுபட்ட பின்னர், பொலிஸாரைக் கண்டவுடன் வாளை பாடசாலை கிணற்றுக்குள் எறிந்துவிட்டுச் சென்றமை விசாரணைகளில் தெரியவந்தது. சந்தேகநபரை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .