2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சியில் மயங்கிய இராணுவ வீரர் மரணம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 31 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை சமரபாகு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் பயிற்சியின் போது மயங்கி வீழ்ந்து, செவ்வாய்க்கிழமை (31) உயிரிழந்ததாக பலாலி இராணுவ தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

19ஆவது சிங்க றெஜிமெண்ட் படைப்பிரிவிலுள்ள, குருநாகலைச் சேர்ந்த பிரச்சன்ன ஜயவத்த (வயது 23) என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முகாமில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பயிற்சிகளில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .