2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம்

Thipaan   / 2015 மார்ச் 31 , பி.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றியோர், இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இதுவரைகாலமும் கடமையாற்றிய இ.ரவீந்திரன், கல்வி அமைச்சின் செயலாளராகவும் கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த எஸ்.சத்தியசீலன், மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும் மீன்பிடி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.வரதீஸ்வரன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சி.திருவாகரன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மனிதவள அபிவிருத்தி பயிற்சி பிரதி பிரதம செயலாளராக அ.சிவபாதசுந்தரன் நியமிக்கப்படவுள்ளார். இவர் இதுவரை காலமும் வடமாகாண சபையின் சபைச் செயலாளராக கடமையாற்றி வந்தார். இதுவரைகாலமும் உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றிய ம.ஜெகூ, புதிய சபைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .