2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காரைநகரில் பொலிஸ் நிலையம் அமைக்க அனுமதி

George   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

காரைநகரில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். 

யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், காரைநகருக்கு என தனியான பொலிஸ் நிலையம் இதுவரை இல்லை. 

காரைநகர்   ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்டே  உள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து காரைநகருக்கு கடல் பாதை வழியாகவே பொலிஸார் செல்ல வேண்டும். இதனால் பொலிஸார் உரிய நேரத்துக்கு செல்ல முடியாதுள்ளது. 

காரைநகருக்கு என்று தனியான பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு பொலிஸ்மா அதிபர் அனுமதி அளித்துள்ளார். 

பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஏதுவான காணியை காரைநகர் பிரதேசத்தில் பார்வையிட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு காரைநகர் செல்லவுள்ளது.  பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தகுதியான காணி கிடைத்ததும் விரைவில் கட்டடப்பணி முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .