Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய குடிநீர் தாங்கியில் விஷம் கலந்த சம்பவம தொடர்பில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தண்ணீர் தாங்கியில் கிருமி நாசினி கலந்தமை தொடர்பான விசாரணைகள் எந்த நிலையில் உள்ளது? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், அந்த சம்பவம் தொடர்பிலான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகள் முடிவடைந்த பின்னர் பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் ஊடக பேச்சாளர், சம்பவம் தொடர்பில் பூரணமாக ஊடகங்களுக்கு அறிவிப்பார் என தெரிவித்தார்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025