2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறனாளிகளின் தேவை மதிப்பீடு வேண்டும்: பிரதமரின் செயலாளர்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவை மதிப்பீட்டை தமக்கு தருமாறு சமூக சேவைகள் அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலமாகக் கேட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர், புதன்கிழமை (01) தெரிவித்தார்.

இந்த கடிதத்தின் பிரதி குறித்த 3 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் மேற்படி மாவட்டங்களுக்கு வருகை தந்த போது மாற்றுத்திறனாளிகள் முன்வைத்த கோரிக்கையின்படி இந்த தேவை மதிப்பீடு செய்யப்படுவதாகவும் வடமாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை வழங்குவதற்கான பிராந்திய நிலையமொன்று கிளிநொச்சியில் அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .