2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஒளித்தெறிப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பொலிஸார்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் பாவனை செய்யும் வாகனங்களுக்கு ஒளித்தெறிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி ரி.டி.தனுஸ்க பண்டார வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.

துவிச்சக்கரவண்டி, உழவுய இயந்திரம், சிறிய ரக உழவு இயந்திரம் ஆகியவற்றுக்கு இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன. அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு வேளைகளில் நடைபெறும் விபத்துக்களை தடுக்கு வகையில் இந்த ஸ்ரிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.

900 வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை வியாழக்கிழமை (02) முதல் ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து பொறுப்பதிகாரி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .