2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வடமாகாண கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வியாழக்கிழமை (02) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாகவும் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினர்.

இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடியால், கடல்வளம் அழிக்கப்படுவதுடன் இந்திய றோலர்களின் மூலம் தொடர்ச்சியான மீன்பிடி இடம்பெறுமானால், எதிர்காலத்தில் கடல்வளம் முற்றாக அழிவடைந்து வடபகுதி கடற்றொழிலாளர்கள் நெருக்கடியை எதிர்கொள்வார்கள் என்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் வடபகுதி கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடபகுதியின் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஆகியோரும் மீன்பிடித் திணைக்களத்தின் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .