2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திருட்டை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வேலணை பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், வர்த்தக சங்கத்தின் நிதியுதவியுடன் இரவு காவல் கடமைக்கு இரண்டு காவலாளிகள் நியமிக்கவுள்ளதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் வாரத்துக்குள் வேலணை சந்தியில் 10 மின்விளக்குகள் பொருத்துவதற்குரிய ஆரம்பகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் திருட்டுக்களை கட்டுப்படுத்த முடியும். இதற்காக ஊர்காவற்றுறை பொலிஸார் முழுமையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

அண்மைக்காலமாக வேலணை பகுதியில் ஆலய விக்கிரகங்கள், உண்டியல்கள் என்பன திருடப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்கு முன்னர் வேலணை வங்களாவாடி சந்தி பகுதியில் தொடர்ச்சியாக ஏழு கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளது.

இவ்வாறான சம்பவங்களினால் வர்த்தகர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .