2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆடுகளை திருடி விற்க முற்பட்டவர் கைது

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவரை யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (03) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் என தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரிடம் இருந்து இரண்டு ஆடுகளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சந்தேக நபர், திருடிய ஆடுகளை ஐந்து சந்திப்பகுதியில் மலிவான விலையில் விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

இவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

கைதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஊர்காவற்துறை பகுதியில் மேற்படி இரண்டு ஆடுகளும் திருடி வரப்பட்டமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .