2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தாய்ப்பால் புரையேறியதால் சிசு மரணம்

George   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கரவெட்டி கிழக்கு நெல்லியடி பகுதியில், தாய்ப்பால் புரையேறியதால் சிசுவொன்று பலியான சம்பவம், வெள்ளிக்கிழமை(03) இரவு இடம்பெற்றுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நிஸான் இந்துஜன் என்ற 51 நாட்களேயான ஆண் சிசுவே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  இரவு 8 மணியளவில், குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு குழந்தை நித்திரையில் உள்ளதாக நினைத்த தாய், வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், இரவு 9 மணியளவில் குழந்தையை தூக்கியபோது சிசு அசைவற்று காணப்பட்டுள்ளது.

உடனடியாக குழந்தையினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .