2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காணமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

George   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னாகம் விசுவத்தேனை பகுதியில். வியாழக்கிழமை(02) காணாமல் போன மூதாட்டி, சடலமாக சனிக்கிழமை (04) காலை மீட்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சுப்பிரமணியம் அன்னம்மா (வயது 92) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை(02) முதல் மேற்படி மூதாட்டி காணாமல் போயுள்ள நிலையில், அவரது உறவினர்கள், வெள்ளிக்கிழமை(03) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் மூதாட்டி அவரது வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள பழைய வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .