Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால், இன்று சனிக்கிழமை (04) இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை இரு தலைவர்களின் உருவபொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பல பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் கட்சி தலைமைகள் மூடி மறைக்கின்றன என்பதனை கண்டித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'மாவை சேனாதிராசாவே தமிழ் இளைஞர்கள், விதவைப் பெண்களை மறுமணம் செய்யவேண்டும் என்றீரே! உமக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இவ்வாறு செய்து முன்னுதாரணமாக நடந்து கொள்வீரா?'
'பெண்களாய் பிறந்தது எமது சகோதரிகளின் குற்றமா? உரிமைகளோடு உங்களை நம்பி உதவி கேட்டு வருபவர்களுக்கு வன்புணர்வுதான் உதவியா?
'வேலியே பயிரை மேயலாமா? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோசம் இட்டும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025