2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பனை மரங்கள் தறித்த மூவர் கைது

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மீசாலை அல்லாரை பகுதியில் சட்ட விரோதமான முறையில் மூன்று பனை மரங்களை தறித்த மூவரை சனிக்கிழமை  (04) காலை கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எம்.சிந்தக்க.என்.பண்டார தெரிவித்தார்.

அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்;கு சென்ற பொலிஸார், மூவரையும் கைது செய்து விசாரித்ததில் அனுமதிபத்திரம் இன்றி பனை மரங்கள் வெட்டியமை தெரிய வந்துள்ளது.

அத்துடன் வெட்டப்பட்ட மூன்று பனை மரங்களையும் பொலிஸ் நிலையத்துக்;கு கொண்டு வந்துள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

கைதான மூவரையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .