Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் பிற்போடப்பட்டமை தொடர்பில், ஊகத்தின் அடிப்படையிலான தவறான செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விடயம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஊடகங்களுக்கு சனிக்கிழமை(04) அனுப்பியுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போதியளவு அனைத்து அம்சங்களையும் ஆலோசிக்காமலும் கருத்திலெடுக்காமலும் வடக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனால் இவ்விடயங்கள் தொடர்பாக மீளாய்வுக்கும் ஆலோசனைக்கும் கால அவகாசம் கொடுக்கும் வகையில் குறிப்பிட்ட இடமாற்றங்கள் ஆளுநரினால் பிற்போடப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரால் மேற்படி இடமாற்றங்கள் தொடர்பில் கரிசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை வாரியத்தினால் சம்பந்தப்பட்ட தரப்புகளின் மத்தியில் மீளாய்வும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு இணக்கம் காணப்படும் சிபாரிசுகளுக்கு அமைவாக, சுமுகமான சேவைச் சூழலை இலகுபடுத்தும் வகையில் அவசியமான இடமாற்றங்கள் அமுலுக்கு வரும்.
அவ்வாறான நியமனங்களை மேற்கொள்வதற்கு சட்டபூர்வமான ஆணை வழங்கப்பட்ட அதிகாரத்தரப்பாக மாகாண ஆளுநர் விளங்கும்போது, இந்த சம்பவம் தொடர்பில் 'வடக்கு மாகாண சபை விவகாரங்களில்; சட்டத்துக்கு முரணாக ஆளுநர் தலையிடுகிறார்' என்ற ரீதியில் கூறமுற்படுவது முற்றிலும் ஆதாரமற்றதும் தவறான திசைதிருப்பலும் ஆகும்.
இந்த இடமாற்ற விடயத்தில் ஆளுநருடைய முயற்சியானது, வட மாகாண சபையில்; பரஸ்பரம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை உருவாக்குவதற்கு அனுசரணை வழங்கும் நோக்கத்தை கொண்டதாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025