2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கடலில் நீராடிய இளைஞனை காணவில்லை : 11 பேர் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொண்டைமானாறு அக்கரை கடலில் சனிக்கிழமை (04) குளித்துக்கொண்டிருந்த 12 பேரில் ஒரு இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் மிகுதி 11 பேரையும் கைது செய்துள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் வடக்குப் பகுதியை சேர்ந்த கருணாணந்தன் மிதுலன் (வயது 22) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.
நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்;டாட்டத்தை கொண்டாடுவதற்காக கடலுக்கு சென்ற இவர்கள், கடலில் குளித்த பின்னர் கேக் வெட்டுவதற்காக அனைவரையும் அழைத்தபோது, ஒருவர் மட்டும் கரைக்கு வரவில்லை.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, மீனவர் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் காணாமல் போனவர் மீட்கப்படவில்லை. ஏனைய 11 நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய 11 நண்பர்களையும் சந்தேகத்தில் அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .