2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இறைவன் நம்பிக்கை வாழ்வை திடப்படுத்தும் - யாழ்.ஆயரின்

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

எமது நம்பிக்கை வாழ்வைத் திடப்படுத்தி நாம் புத்துயிர் பெற்றவர்களாய் முன்னோக்கிச் செல்லத்துணையாகத்தான், ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் விழாவை நாம் கொண்டாட இறைவன் அருள்கூர்ந்துள்ளார் என யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் விழாவையொட்டி யாழ். ஆயர், ஞாயிற்றுக்கிழமை (05) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவ்விழாவின் முக்கிய நாட்களாகிய பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பாஸ்கா திருவிழிப்பு, உயிர்ப்பு ஞாயிறு ஆகிய நாட்களில் நாம் பங்கு கொள்கின்ற திருவழிபாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் எமது நம்பிக்கை வாழ்வை உறுதிப்படுத்தி நமக்குப் புதுத்தெம்பை தருவனவாகவே அமைந்துள்ளன.

இந்த வருடமும் நாம் அனுசரிக்கின்ற பாஸ்கா கொண்டாட்டங்கள் எமது வாழ்வில் நாம் அனுபவிக்கின்ற சலிப்புத்தன்மைகள், வேதனைகள், இடர்கள் அனைத்தையும் நாம் துணிவோடு எதிர்கொள்ள எமக்கு புதிய உந்து சக்தியாக அமைகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .