2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அச்சகத்திலிருந்து சடலம் மீட்பு

George   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாகவுள்ள அச்சகத்திலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம், சனிக்கிழமை(04) பிற்பகல் மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை(05) தெரிவித்தனர். 

இணுவில் கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த கே.செல்வானந் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். 

அச்சகத்தில் இருந்த இவர் நீண்டநேரமாக வெளியில் வராததால் சந்தேகம் கொண்ட பக்கத்துக் கடைக்காரர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது அவர் நிலத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார். 

உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது அவர் மரணமடைந்ததாக வைத்தியசாலையில் கூறப்பட்டது. 

கடையில் இருந்த ஆழியில் மின்சாரம் ஒழுக்கு ஏற்பட்டு இவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .