2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

25 வருடங்களின் பின்னர் சொந்த கடலில் வீச்சு வலை

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வளலாய் வடக்குப் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டமையடுத்து, அங்கு மீளக்குடியமரவிருக்கும் தேவசகாயம் மரியதாஸ் தனது முன்னைய தொழிலான வீச்சு வலைத்தொழிலை தற்போது மாலை நேரங்களில் மேற்கொண்டு வருகின்றார்.

அவருடன் உரையாடும் போது அவர் கூறியதாவது,

1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடன் மீன்பிடியில் ஈடுபட்ட நண்பர்கள் யாரும் தற்போது இல்லை. எனது தலைமுறையில் நான் மட்டுமே இப்போது இங்கு வந்து வீச்சு வலை மீன்பிடியில் ஈடுபடுகிறேன்.

மீண்டும் சொந்த இடத்தில் வந்து மீன்பிடியில் ஈடுபடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் வளலாய் பகுதியை விட்டு பருத்தித்துறை திக்கம் பகுதியில் சென்று குடியமர்ந்தோம். இடம்பெயர்ந்து பல இன்னல்களையும் சொல்லெணாத் துன்பங்களையும் அனுபவித்தோம்.

வளலாய் வடக்கு பகுதியில் தற்போது மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் நான் தற்போது வசிக்கும் எனது வீட்டிலிருந்து தினமும் மாலைகளில் வளலாய் வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றேன்.

யுத்தத்தால் இழந்த சொத்துக்கள் எல்லாம் தற்போது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இந்த மண்ணில் கால் வைத்ததே பெரிய சந்தோசம். சொந்த ஊருக்கு செல்வேனா என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது.

தினந்தோறும் மாலையில் வந்து வீச்சுவலை மீன்பிடி மேற்கொள்ள முடிகிறது. மனதுக்கு இனிமையாகவுள்ளது.

இங்கு ஒட்டி, மணலை போன்ற மீன்களை பிடிக்கின்றேன். அவற்றை கிலோ 300 ரூபாய் தொடக்கம் 400 ரூபாய் வரையில் விற்கின்றேன். மீளக்குடியமர்ந்த எங்களுக்கு அரசாங்கம் உதவிகளை செய்யவேண்டும். எமது மீன்பிடி உபகரணங்களை வழங்கினால் எமது வாழ்வாதாரத்தை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .