2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கட்டி வளர்க்காத நாய்க்கு எதிராக முறைப்பாடு

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். தம்பானை நாச்சிமார் கோவில் வீதியிலுள்ள வீட்டுக்காரருக்கு எதிராக  75 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை (05) விசித்திர முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சென்ற தன்னை மேற்படி பகுதியிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்து விட்டதாகவும், அது தொடர்பில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

மேற்படி வீட்டில் 3 நாய்கள் வளர்க்கப்படுவதாகவும், அவற்றில் இரண்டு நாய்களுக்கு விசர் நாய் தடுப்பூசி ஏற்றப்படவில்லையென மூதாட்டி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டை தெரிவித்த மூதாட்டி அதன் பின்னர் அச்சுவேலி வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .