2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'செயலாளர்களின் மாற்றல், இடைநிறுத்தம் தொடர்பில் சிபார்சு செய்யவில்லை'

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களின் அமைச்சு மாற்றல்கள் தொடர்பாக அவற்றை இடைநிறுத்தவோ மாற்றம் செய்யவோ நான் எந்த சிபார்சும் செய்யவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இது தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் எனக்கூறி, ஒப்பமிடாது தமது குறைபாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய மனுவின் பிரதியொன்று எனக்கும் கிடைக்கப்பெற்றது. எனது பொதுவான கருத்தை தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அதன் பிரதி ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது.

அந்தக் கடிதத்தில் எந்த இடத்திலும் இந்த இடமாற்றங்களை மாற்றவோ  இடைநிறுத்த வேண்டும் என்றோ நான் சிபாரிசு செய்யவில்லை. மேலும், இந்த இடைநிறுத்த உத்தரவு, கடந்த மார்ச் 31ஆம் திகதியே வழக்கப்பட்டுவிட்டன. எனது கடிதம் கடந்த 01ஆம் திகதியே ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்த இடமாற்றங்களிலோ அல்லது அவற்றின் இடைநிறுத்தங்களிலோ எனது வகிபாகம் எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்துகொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்களை இடமாற்றம் செய்வது தொடர்பில் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிகாரவினால் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் சில ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னரே இடமாற்றங்கள் வழங்கப்படும் எனக்கூறப்பட்டு, இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .