2025 ஜூலை 09, புதன்கிழமை

இ.போ.ச வடபிராந்திய புதிய முகாமையாளருக்கு வாகனம் இல்லை

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற எஸ்.ஏ.அஸ்கர், வடபிராந்தியத்துக்கு சொந்தமான வாகனத்தைக் கொண்டு சென்றுள்ளதாகவும் அதனை மீளவும் கையளிக்கவில்லையெனவும் போக்குவரத்துச் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடபிராந்திய முகாமையாளராக கடமையாற்றி வந்த அஸ்கர் கடந்த மார்ச் 22ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச்சென்றார்.
வடபிராந்திய முகாமையாளராக அவர் கடமையாற்றிய காலப்பகுதியில் செய்த மோசடிகள், இலஞ்சம் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட விடயங்களை தொடர்பில் இலங்கை போக்குவரத்துச்சபை பொது ஊழியர் சங்கத்தால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது புதிய முகாமையாளராக கே.கேதீஸன் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கான வாகனத்தை அஸ்கர் கொண்டு சென்றுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .