2025 ஜூலை 09, புதன்கிழமை

போக்குவரத்து வசதியின்மையால் மாணவர்கள் அவதி

Kogilavani   / 2015 மே 06 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கோரக்கன்கட்டு கிராமத்துக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் 200க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்கட்டு கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றர்.

இக்கிராமத்தில் பாடசாலை இன்மையால் இங்குள்ள சுமார் 200 மாணவர்கள் 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் மற்றும் 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தமது கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

கிராமத்திலிருந்து போக்குவரத்து வசதிகள் எவையும் இன்மையால், தினமும் கால்நடையாக பாடசாலைக்கு செல்வதால் களைப்படையும் மாணவர்கள் பாடசாலையில் தங்கள் கல்வியில் அக்கறை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இக்கிராமத்தில் இருந்து மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுவரக் கூடிய வகையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .