2025 ஜூலை 09, புதன்கிழமை

'வியர்வை சிந்தாதவர்கள் எங்களின் மக்கள் பணிக்கு உரிமை கோருகின்றனர்'

Thipaan   / 2015 மே 06 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியர்வை கூட சிந்தாதவர்கள் எங்களின் மக்கள் பணிக்கு உரிமை கோருகின்ற கேவலமான அரசியலை செய்கின்றனர் என வட மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வைத்தியநாதன் தவநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் பழைய குடியிருப்பு மக்களை செவ்வாய்க்கிழமை (05) சந்தித்துக் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இந்த மாவட்டத்திலுள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு துளி வியர்வை கூட சிந்தாதவர்கள், நாங்கள் செய்கின்ற மக்கள் பணிக்கும் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினரின் உழைப்புக்கும் உரிமை கோருகின்ற மிகக்கேவலமான அரசியலை செய்து வருகின்றனர்.

கடந்த ஜந்து வருடங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் எங்களால், எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை மாவட்ட மக்கள் நன்கறிவார்கள்.

இந்த ஜந்து வருடங்களில் மக்களுக்காக, மாவட்டத்தின் முன்னேற்றத்துக்காகவும் ஒரு செங்கல்லையேனும் வைக்காதவர்கள் இன்று எமது மக்கள் பணிகளுக்கு உரிமை கோரி அரசியல் செய்கின்றவர்களாக உள்ளனர் என்றார்.

அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,

கிளிநொச்சி மாவட்டத்தில் எல்லா கிராமங்களுக்கும் சென்று எல்லா மக்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் கேட்டறிந்து  நிவர்த்தி செய்து வருகின்றோம்.

அந்த வகையில் ஊற்றுப்புலம் கிராமத்தின் பழைய குடியிருப்பு மக்கள் தங்களின் ஒடுக்கு பாலம்  தொடர்பிலும் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து எங்களின் முயற்சியும்  தொடர்ச்சியான நடவடிக்கையும் இங்கு ஒரு நிரந்தர பாலத்துக்கு வழிவகுத்துள்ளது.

தர்மபுரம், நெத்தலியாறு பாலத்தை இங்கு கொண்டு வருவதற்காக ஆட்சி மாற்றத்துக்கு முன்னரும் அதற்கு பின்னரும் முயற்சிகள் எடுக்கப்பட்டது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .