2025 ஜூலை 09, புதன்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது

George   / 2015 மே 07 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக  கஞ்சா பொதியுடன் நின்றிருந்த ஒருவரை புதன்கிழமை (06) இரவு கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்கேதநபர், இளவாலை பனிப்புலம் பகுதியில் கஞ்சாவை கொள்வனவு செய்து, கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக பஸ்ஸுக்காக காத்திருந்துள்ளார்.

மதுபோதையில் நின்றிருந்த சந்தேகநபர், சந்தேககத்துக்கு இடமான முறையில் இருப்பதை அவதானித்த பொலிஸார், அவரிடம் விசாரணை செய்த போது, அவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது. 

இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவருக்கு கஞ்சா விற்பனை செய்தவர் தொடர்பில் இளவாலை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .