Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 மே 07 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
அரச சேவைகள் நம்பிக்கை நிதியத்தால் ஒய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய உதவித்திட்டத்தின் அளவு கடந்த மாதம் ஏப்ரல் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அனைத்து அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்துக்கு நம்பி;க்கை நிதியத்தின் செயலாளர் எஸ்.பீ.ராஜநாயக்க சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார்.
இதுவரை காலமும் அங்கத்துவப் பணமாக அறவிடப்பட்ட அங்கத்துவம் பணத்தின் அளவு ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மானியமாக வழங்கப்பட்ட தொகையும் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் மரணப் பனிக்கொடையாக வருட ஒன்றுக்கு 1,750 ரூபாய் தொடக்கம் ஆகக்கூடிய தொகையாக 11,900 ரூபாய் வரையில் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகையில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கு உட்பட்டவர்களுக்கு 3000 ரூபாயும் இரண்டு வருடத்துக்கு மேற்பட்டவர்களுக்கு 6,000 ஆயிரம் ரூபாயும் மூன்று வருடங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு 15,000 ரூபாயும் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
கண் சிகிச்சைக்கு இதுவரை காலமும் ஒரு கண்ணுக்கு 4,000 ரூபாய் என்ற அடிப்படையில் இரண்டு கண்களுக்கும் 8,000 ரூபா வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகையானது ஒரு கண்ணுக்கு 5,000 ரூபாய் வீதம் இரண்டு கண்களுக்கும் 10,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை கொடுப்பனவானது ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் 15 நாட்களுக்கு 3750 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகையில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்ற அடிப்படையில் ஆகக்கூடியது 10 நாட்கள் என்ற அடிப்படையில் 5,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதயம், மூளை, சிறுநீரகம், புற்று நோய் போன்ற சத்திரசிகிச்சைகளுக்கு ஒரு சிகிச்சைக்கு மட்டும் 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகையானது 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒய்வூதியர்களின் பிள்ளைகளுக்கான பட்டப்படிப்புக்கு முதல் இரு பிள்ளைகளுக்கு வருடாந்தம் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த தொகையானது தற்போது 6,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago