2025 ஜூலை 09, புதன்கிழமை

இராணுவத்தினரை மோதிய டிப்பர் சாரதிக்கு பிணை

George   / 2015 மே 07 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, தொண்டமான் நகர் ஏ – 9 வீதியில் செவ்வாய்க்கிழமை(05) இரவு, மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவத்தினரை மோதிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதியை, 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் 1 இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐவாகப்தீன் புதன்கிழமை (06) அனுமதியளித்தார்.

இரணைமடுப் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு இராணுவத்தினர், வீதியின் குறுக்காகச் சென்ற மாட்டுடன் மோதி, தொடர்ந்து எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதியுள்ளனர்.
 
படுகாயங்களுக்குள்ளான இருவரும் முதலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார், டிப்பர் வாகன சாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .