Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மே 08 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கழிவு எண்ணெய் பாதிப்புள்ளதாக அடையாளங் காணப்பட்ட சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கும் குடிநீரை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இலவசமாக வழங்கவில்லையென குடிநீர் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரியொருவர் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
நகர்ப்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், குடிநீர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கான குடிநீரை இலவசமாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பிரதேச சபை மற்றும் குடிநீர் வழங்கும் அமைப்புக்களுக்கு வழங்குவதாக கூறியிருந்தார்.
ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை. பாதிக்கப்பட்ட 70 கிராமஅலுவலர் பிரிவில் 60 கிராமஅலுவலர் பிரிவுகளுக்கு நாளாந்தம் 3 இலட்சம் லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. தொண்டைமானாறு பகுதியிலுள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து 1,000 லீற்றர் 72 ரூபாய் என்ற அடிப்படையில் குடிநீர் கொள்முதல் செய்யப்படுகின்றது. நாளாந்தம் 21,600 ரூபாய் குடிநீர் கொள்முதல் செய்ய செலவாகின்றது. இதனைவிட பவுஸர் செலவும் நாங்கள் செலுத்தியே குடிநீர் வழங்கி வருகின்றோம் என்றார்.
இது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் கருத்துக்கூறுகையில், 'கட்டணம் அறிவிட்ட பின்னரே குடிநீர் தருகின்றனர். கட்டணம் செலுத்தப்படவில்லையென சில தினங்கள் குடிநீர் தரவில்லை. பவுஸர் 45 கிலோமீற்றர் தூரம் சென்று குடிநீரைப் பெற்று விநியோகிக்க வேண்டியுள்ளது.
அச்சுவேலியூடான குறுக்கு வீதியை திறந்து விடும்படி கேட்டிருந்தும் அரசாங்கம் அதனை செய்யவில்லை. இதனால், பவுஸர் நீண்ட தூரம் பயணிப்பதால் எரிபொருள் செலவு மற்றும் பவுஸர் ரயர்கள் விரைவில் தேய்வடைகின்றது' என்றார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago