2025 ஜூலை 09, புதன்கிழமை

சிறுமிக்கு தொல்லைக் கொடுத்த இளைஞனுக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலைக்குச் செல்லும் 13 வயது சிறுமிக்கு தொல்லைக் கொடுத்துவந்த, 22 வயதுதான இளைஞனை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். குருநகர் பெண்கள், சிறுவர் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

 குறித்த சிறுமியை பின் தொடந்து வந்த மேற்படி இளைஞன், தன்னை காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து, சந்தேகநபர் வியாழக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சிறுவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே மேற்படி இளைஞனை நீதவான்; விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .