2025 ஜூலை 09, புதன்கிழமை

மணல் அகழ்ந்தவருக்கு ரூ. 20,000 அபராதம்

George   / 2015 மே 09 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட கெற்பேலி பகுதியினை சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

அத்துடன் மணலை பறிமுதல் செய்யுமாறு கொடிகாமம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கடந்த மாதம் (ஏப்ரல்) 16ஆம் திகதி, கொடிகாமம் கெற்பேலி பகுதியில் சிறிய மோட்டார் ரக வடி வாகனத்தில் மணல் ஏற்றிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேகநபருக்கு எதிராக கொடிகாமம் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து நீதவான், சந்தேகநபருக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .